×

ஆந்திரா, கர்நாடகா மோதும் நிலையில் தமிழகம் பலன் காணுமா?: பியூஷ் மானுஷ், சுற்றுச்சூழல் ஆர்வலர்

சென்னை:  அடுத்த மாநிலத்தில் இருந்து கிடைக்கும் தண்ணீரை வைத்து, தமிழகத்தில் பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீருக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயத்திற்கு அதே நிலைமை தான். காவிரியில் கிடைக்கும் நீரை வைத்து மேட்டூரில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு பாசன தேவையை பூர்த்தி செய்கிறது. இந்த சூழ்நிலையில், மாநிலங்களுக்கு இடையே ஓடும் நீரை நதிகள் இணைப்பு திட்டம் மூலம் திருப்பி  விடப்போவதாக கூறி வருகின்றனர். நாம் வேறு மாநிலங்களில் இருந்து தண்ணீர் ெகாண்டு வரப்போவதாக பேசி வரும் இதே சூழலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ.4 ஆயிரம் கோடி செலவில் கோதாவரி நீரை திருப்பி  கொண்டு சென்று விட்டார்.  கோதாவரி தண்ணீருக்காக தெலங்கானா, ஆந்திராவுமே அடித்து கொள்கின்றனர். இந்த சூழ்நிலையில் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை கொண்டு வரப்போவதாக கூறுவது சாத்தியமா என்பது  தெரிய வில்லை.

தமிழகத்துக்கு பலன் கிடைக்குமா என்றும் தெரியவில்லை. அதே நேரத்தில் தண்ணீரை தனியார் மயமாக்குவதற்காகவே இதற்கான வேலை நடந்து வருகிறது. பைப்லைன் மூலம் தண்ணீர் கொண்டு வரப்போவதாக கூறியுள்ளனர்.  இதற்காக, மத்திய அரசு தனியார் நிறுவனத்தின் பங்களிப்பு மூலம் தான் அதை செய்யப்போகிறது. எப்போது நாம் வறட்சி பற்றி பேசினாலும், கவலைப்படாதீர்கள் என்று கூறி நதிகள் இணைப்பு திட்டத்தை பேச ெதாடங்கி  விடுகிறார்கள். நடக்கிற திட்டத்தை பற்றி பேச மாட்டார்கள். நதிகள் இணைப்பு திட்டம் என்று சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய கேடு. இந்த திட்டத்திற்காக எவ்வளவு நிலம் தேவைப்படும், எத்தனை சிறிய அணை கட்ட வேண்டும்  என்பதை பார்க்க வேண்டும். முதலில் நமது நீர்நிலைகளின் கட்டமைப்பு மேம்படுத்த வேண்டும். இதற்கு வெறும் ரூ.2 ஆயிரம் கோடி மட்டுமே செலவாகும்.

 இங்குள்ள நீர்வள ஆதாரங்களை நன்றாக வைத்திருந்தால் தண்ணீர் பிரச்னை வராது. முதலில் இதற்கு முதலீடு செய்யுங்கள். அதை விடுத்து தேவையில்லாமல் கோதாவரி திட்டம் என்ற பெயரில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு  என்பது வீண். மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கிறது. இதை மறைக்கவே கோதாவரி இணைப்பு திட்டம் கொண்டு வரப்போவதாக மத்திய அரசு கூறி வருகிறது. மேகதாது அணை கட்டி முடிக்கும் வரை அப்படி தான்  ெசால்வார்கள். அதன்பிறகு, இந்த திட்டம் குறித்து வாய் திறக்க மாட்டார்கள். கஜா புயலால் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.1300 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.  இது, 2 லட்சம் மின் கம்பங்கள்  வாங்கவே சரியாக இருக்கும். இப்படி ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை, கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்திற்கு ரூ.60 ஆயிரம் கோடி. சாதாரண திட்டத்திற்கு பணம் இல்லை. யாரெல்லாம் பணம் சம்பாதிப்பதற்காக  நமது பெயரை சொல்லி கடன் வாங்குகின்ற னர் என்பது கேள்விக்குறிதான்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu ,Andhra Pradesh ,Karnataka , Andhra Pradesh, Karnataka, Tamilnadu, Puish Manush, Environmental Activist
× RELATED போலீஸ் ஆதரவுடன் மீஞ்சூர் பகுதி...